ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் இலங்கைக்கு விஜயம்

<!–

ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் இலங்கைக்கு விஜயம் – Athavan News

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது விஜயத்தின்போது மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *