சகலருக்கும் போஷாக்கு உணவு கிடைக்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம்! பிரதமர் உறுதி

சகலரும் போஷாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான இலங்கையை கட்டியெழுப்புவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற உலக உணவு தின நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பை தேசிய முன்னுரிமையாகக் கருதுவதால், விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

உலகளாவிய எதிர்மறை தாக்கங்களுக்கு முகங்கொடுத்து உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கையும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வதால், இந்த நாட்டின் விவசாயிகள், நட்பு நாடுகள் மற்றும் ஐ.நா முகவர் அமைப்புகளின் ஆதரவுடன் மீண்டும் உணவுப் பாதுகாப்பு நாடாக மாறும் திறன் எமக்கு உள்ளது.

உணவு உற்பத்தியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டதால், தற்போது மக்கள் விவசாயத்தின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவு உற்பத்தி வேலைத்திட்டம் தேசிய, மாவட்ட, பிராந்திய மற்றும் கிராமிய மட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுஎன பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *