யாழ்ப்பாணம் – வேலணையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
சரவணை மேற்கு, வேலணை J/21 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஒரு பகுதியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 21 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் (01) தொடக்கம் குறித்த பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
இங்கு 76 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.