அட்டை பண்ணையால் இடையூறு:கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கருத்து!

பூநகரி கிராஞ்சி சிறீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிகளின் ஊடக சந்திப்பு ஒன்று யாழ்ப்பாண ஊடக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளிள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 10,15 நாட்களுக்கு மேலாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று எமது கடற்கரையில் இடம்பெறுகின்றது.
அட்டை பண்ணை இனி அமைக்ககூடாது என்றும்,ஏற்கனவே அடைக்கப்பட்ட அட்டை பண்ணை அகற்றுவதற்கும் குறித்த போராட்டம் இடம்பெறுகின்றுது.

அவர்கள் எம்மீது சுமத்துகின்ற குற்றஞ்சாட்டு உண்மைக்கு புறம்பானது.எங்கள் மீதும் கடற்தொழில்சார் திணைக்களம் மீதும் திணைக்கள ஊழியர்கள் மீதும் பொய்யான குற்றஞ்சாட்டி ஏனைய மக்களின் இரக்கத்ததை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஏன் என்றால் அட்டை பண்ணையை தாங்கள் அமைப்பதால் தங்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறி அதில் 3 குடும்பங்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக அட்டை பண்ணைகள் அமைக்கப்படவில்லை.இனியும் அமைக்கமாட்டார்கள்.

குறித்த 3 குடும்பத்தினரும் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடற்கரையில் இடத்தை பிடிப்பதற்கு உகந்த இடமல்ல. நாரா நிறுவனம் குறிப்பிட்ட இடத்தை அளந்து அட்டை பண்ணையோ வேற எந்த உயிரினங்களையும் வளர்க்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் இந்த3 குடும்பங்களும் தங்களுக்குரியது என்று கூறுவது நியாயமற்றது.

நாங்கள் அட்டை பண்ணை அமைந்திருப்பதால் அவர்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காது.

இது தொடர்பாக கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு தெரிவித்து நாரா நிறுவனம் குறித்த இடத்தை அளவிட வந்த போது நான் குறிப்பிட்ட 3 குடும்ப உறுப்பினர்களும் அவர்களை அளக்க விடாமல் இடையூறு விளைவித்தனர்.

கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அட்டை பண்ணை அமைப்பதற்கான வேலையை ஆரம்பிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஊடகங்களுக்கு செய்திருந்தார்.

அதனை அவர்கள் சட்ட விரோதமாக அமைப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

வருமானத்தை பெற முடியும்.இதை எமது கிராமத்திலும் உருவாக்கி அதிக வருமானத்தை பெறுவதற்கான முயற்சியில் இவர்கள் தடுக்கின்றார்கள்.

இது தொடர்பாக அயல்மீனவர் சங்கத்திடம் முறையிட்டுள்ளோம்.என கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *