யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்!

<!–

யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்! – Athavan News

வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *