மெனிகே மஹே ஹிதே பாடகிக்கு இந்தியா வழங்கிய சிறப்பு விருது!

கலாசார மேம்பாட்டில் சிறந்து விளங்கியமைக்கான விருது பிரபல பாடகர் ஜொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாடு கடந்த 13ம் தேதி இந்த விருதை வழங்கியது.

இதுபோன்ற கவுரவமான விருதைப் பெற்றதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், அவரது பாடல்கள் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜோஹானி தெரிவித்துள்ளார்.

‘மெனிகே மஹே ஹிதே’ பாடலின் ஹிந்தி பதிப்பும் இந்த நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *