மட்டக்களப்பு மாவட்ட விசசாயிகளுக்கு தேவையான யூரியாவை நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சபையில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
2500 மெற்றிக் தொன் யூரியா தருவதாக கூறி இருந்தார்கள். ஆனால் மட்டக்கப்பு விவசாயிகள் 5000 மெற்றிக் தொன் யூரியா கேட்டிருந்தார்கள். எனினும் 4000 மெற்றிக் தொன்யூரியா உடனடியாக விநியோகிப்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இதுவரை 1840 மெற்றிக் தொன் யூரியாவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விநியோகப்பட்டுள்ளது.
70 வீதம் யூரியாவும் 30 வீதம் சேதனப்பசளையும் வயல்களிற்கு இடப்படவேண்டும் என கூறப்பட்ட போதும் குறித்த அளவில் உரங்கள் வழங்கப்படுவதில்லை. மட்டக்கக்களப்பிற்கு 9785 மெற்றிக் தொன் தேவையாக இருக்கின்றது. ஆனால் காலையில் விவசாய இராஜாங்க இமைச்சர் கூறும் போது எதிர்வரும் நவம்பரிலும் டிசப்பரிலும் 120000 யூரியா வர இருப்பதாக கூறுகின்றார்.
குறிப்பாக கிழக்கு மாகாண விவசாயிகள் பொலநறுவை அனுராதபுரம் குருநாகல் போன்ற விவசாயிகளைவிட ஒருமாதம் முன்பாக தமது விதைப்பை தொடங்கும் காரணத்தினால் டிசம்பரில் வர இருக்கும் யூரியா இவர்களுக்கு பிரியோசனமற்றதாக இருக்கும். எனவே நவம்பர்மாதம் வருகின்ற தேவையான யூரியாவை வழங்க கேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
பிறசெய்திகள்