
புதிய நீர் இணைப்புக்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரை அங்குல நீர் குழாய் கொண்ட நீர் இணைப்பிற்கான கட்டணம் இதுவரை 16 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் 27 ஆயிரத்து 200 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 3/4 அங்குல நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள இதுவரை 30 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்த நிலையில், புதிய இணைப்பிற்கு 51 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இதற்கமைய நூற்றுக்கு 70 வீதம் புதிய நீர் இணைப்பிற்கான கட்டணம் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.