
கொழும்பு,ஒக் 18
அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவீனமாக 365726 கோடியே 56,38000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் அதி கூடிய ஒதுக்கீடாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85625 கோடியே 4000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடம் பாதுகாப்புக்கு 53920 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூல முதலாம் வாசிப்பு சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவினால் செவ்வாய்க்கிழமை (18) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 2023 ஆம் ஆண்டுக்கான அரசின் செலவீனங்களில் விசேட செலவீனமாக 2509 கோடியே 7540000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஜனாதிபதிக்கான செலவீனமாக 378 கோடியே 2150000 ரூபாவும் பிரதமருக்கான செலவீனமாக 101 கோடியே 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 794 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு209 கோடியே 5 இலட்சம் ரூபாவும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 164 கோடியே 40 இலட்சம் ரூபாவுமென மொத்தம் 373 கோடியே 45 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 18கோடியே 40 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 21 கோடியே 30 இலட்சம் ரூபாவும் இந்து சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 29 கோடியே 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 61393 கோடியே 70,40 000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 41000 கோடி ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 12920கோடி ரூபாவுமென மொத்தமாக பாதுகாப்புக்கு 53920 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சுக்கு 28 14 கோடி ரூபாவும் நீதி ,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சுக்கு 3320 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 32199 கோடியே 99 98,000 ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு 19 00 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வர்த்தக ,வாணிப மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சுக்கு 607 கோடியே 60 இலட்சம் ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 37264 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கமத்தொழில் அமைச்சுக்கு 11500 கோடி ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு 3720 கோடி ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்கு 1130 கோடி ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 4849கோடியே 1760000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 23200 கோடி ரூபாவும் பொது நிர்வாக ,உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85625கோடியே 4000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு 1445 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்கு 820கோடியே 80இலட்சம் ரூபாவும் கடற்தொழில் அமைச்சுக்கு 645 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்கு 222கோடியே 20 இலட்சம் ரூபாவும் வன ஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 862 கோடியே 10 இலட்சம் ரூபாவும் நீர் வழங்கல் அமைச்சுக்கு 7437 கோடியே 41இலட்சம் ரூபாவும் மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கு 1520 கோடி ரூபாவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு 367 கோடியே 60 இலட்சம் ரூபாவும் தொழில்நுட்ப அமைச்சுக்கு 1156 கோடி ரூபாவும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கு 725 கோடியே 10 இலட்சம் ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு 687 கோடியே 30 இலட்சம் ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கு 1020 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 8390கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.