உலக கோப்பையை தவறவிடும் இலங்கையின் முன்னணி பந்துவீச்சாளர் துஷ்மந்த!

கணுக்கால் காயம் காரணமாக இலங்கையின் துஷ்மந்த சமீர உலகக் கோப்பையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரமோத் மதுஷன் மற்றும் தனுஷ்க குணதிலக இருவரும் அவ்வளவு சீரியஸாக இல்லை என்றும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் தொடை காயங்கள் காரணமாக அவதிப்படுவதாகவும், கசுன் ராஜித அவுஸ்ரேலியா நோக்கி அழைத்துச் செல்லப்படுவார் என்பதோடு அசித பெர்னாண்டோ 15 பேர் கொண்ட குழாத்தில் இணைவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இருந்து துஷ்மந்த சமீர வெளியேறுவார் என இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *