ரி-20 உலகக்கிண்ணம்: அயர்லாந்து அணிக்கு 147 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், குழு பி- 11ஆவது தகுதி சுற்று லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, அயர்லாந்து அணிக்கு 147 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஹோபர்ட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஓட்டங்களையும் ஜோன்சன் சார்லஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், கரேத் டெலானி 3 விக்கெட்டுகளையும் மெக்கார்த்தி மற்றும் சிம்மி சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *