‘மன்னிக்கும் போது மனிதன் கடவுள் ஆகின்றான்’- ‘மைக்கேல்’ பட டீசர் வெளியீடு!

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில், சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில், திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைக்கேல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *