ஐக்கிய மக்கள் சக்தி, 6 இல் 5 பெரும்பான்மை வெற்றி!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொலன்னாவை கூட்டுறவு அலுவலகத்துக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியைப் பெற்றது.

119 இடங்களில் 115 இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டது.

இது,5/6 பெரும்பான்மையாகும்.

கடந்த 35 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் கோட்டையாக அறியப்படும் கொலன்ன தொகுதி கூட்டுறவுத் தேர்தலில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இதேவேளை நாடு தழுவிய கூட்டுறவுத் தேர்தல்களில் 98% க்கும் அதிகமான பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *