அயர்லாந்தை சுலபமாக வீழ்த்தியது இலங்கை

கொழும்பு,ஒக் 23

2022 ரி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 12 சுற்றை இலங்கை அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது. இன்று அயர்லாந்தை மிக இலகுவாக 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, தகுதிச்சுற்று தடுமாற்ற விமர்சனங்களிற்கு பதிலடி கொடுத்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றது. ஹரி ரெக்டர் 45 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
கடினமில்லாத இலக்கை நோக்கி இலங்கை பதற்றமின்றி பயணித்தது. தொடக்க வீரர்கள் குசல் மென்டிஸ், தனஞ்ஜய டி சில்வா 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

தனஞ்ஜய டிசில்வா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் குசல் மென்டிஸ், சரித்த அசலங்க இணை தமக்குள் 70 ஓட்டங்களை பகிர்ந்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
குசல் மென்டிஸ் 43 பந்துகளில் 68 ஓட்டங்களையும், சரித்த அசலங்க 22 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது.
இந்த ஆட்டத்தில் குசல் மென்டிஸ் 61 ஓட்டங்களை பெற்ற போது, சர்வதேச ரி20 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *