நாட்டை விட்டு ஓடியோரின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்!

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகு மூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *