
பிரபல கொரிய வாகன உற்பத்தியாளரான கியா நிறுவனம் சுமார் 71,000 விளையாட்டு பயன்பாட்டு வாகனமான கியா ஸ்போடேஜ் ரக மகிழுந்துகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
குறித்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அலகை சுற்றி தீப்பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2008-2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 71,000 Kia-Sportage ரக SUVகளை திரும்பப் பெறுவதற்கு Kia நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தீ அபாயங்கள் காரணமாக 2016 ஆம் ஆண்டில் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. பழுதுபார்க்கும் வரை அவற்றை வீட்டுக்கு வெளியில் தரித்து வைக்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாகனம் நிறுத்தும் போது அல்லது வாகனம் செலுத்தப்படும் போது ஹைட்ராலிக் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்டைச் சுற்றி (HECU) தீ விபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டில் இந்த வாகனங்களின் ஆபத்தான நிலையைக் கண்டறிந்து பழுதுபார்ப்புகளை முடித்த பின்னர் 8 வாகனங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், 15 வாகனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன என்று நிறுவனம் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், குறித்த வாகனங்களை திரும்ப அழைக்கும் வரை கட்டிடங்களுக்கு அருகில் அல்லது மற்ற வாகனங்களுக்கு அருகில் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) வாகனங்களின் உரிமையாளர்களை கோரியுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட மற்றும் பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, இன்னும் ஆய்வுகள் தொடர்வதாக நிறுவனம் கூறுகின்றது.
இருப்பினும், இந்த சம்பவங்களில் இதுவரை உயிரிழப்புகள், காயங்கள் அல்லது விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று வாகன தயாரிப்பாளர் கூறுகிறார்.
வாகனங்களை திரும்ப அழைப்பது தொடர்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் அஞ்சல் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்