
கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரிகளுக்கு ஒரு கிலோ கோதுமை மாவை கொள்வனவு செய்வதற்கு சுமார் 300 ரூபா செலவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இப்போதே அறிவிக்க முடியாது எனவும், அது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்