தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலைக்கஞ்சி வழங்கலும்!

தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், அராலி மத்திய சித்த மருந்தகத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அராலி மத்திய சித்த மருந்தகத்தின் தலைமை மருத்துவப் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ. சொரூபி தலைமை தாங்கினார்.

இதன்போது நீரிழிவு நோயின் தாக்கம், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கின் பின்னன் வீதியில் சென்ற மக்களுக்கு இலைக்களஞ்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏனைய வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply