இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை வீதி விபத்துக்களில் 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக அக்குழுவின் அழைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மாதாந்தம் சராசரியாக 230 ஆகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பதிவான உயிரிழப்புகளில் 1,000-க்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களுடன் தொடர்புடையவை எனச் சுட்டிக்காட்டிய அவர், வீதி விபத்துக்களால் 800-க்கும் மேற்பட்ட பாதசாரிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொத்த உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 2,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் மற்றும் பாதசாரிகள் தொடர்பான விபத்துக்களிலேயே பதிவாகியுள்ளன.



