‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட்: இரசிகர்கள் கொண்டாட்டம்!

தல அஜித்தின் இரசிகர்கள், அவரது ‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட்டுக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை கொண்டாட வைக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

பஞ்சாபில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *