குழு 1 இல் காணப்படும் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுப் போட்டி சற்று முன்னர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் மொஹமட் நபி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்.
இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. முன்னணி சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு பதிலாக பிரமோத் மதுசான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து ஹஸ்ரத்துல்லா சஷாய் உபாதை காரணமாக வெளியேறியிருக்கின்றார்.
இலங்கை XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, பிரமோத் மதுசான், மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித
ஆப்கானிஸ்தான் XI – ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹீம் சத்ரான், குல்படின் நயீப், உஸ்மான் கனி, நஜீபுல்லா சத்ரான், மொஹமட் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீட் கான், முஜீப், பரீட் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி