
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை பல்வேறு துறைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையின் தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கேரட் தங்கத்தின் விலை 156,000 ரூபாவாகவும், 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 169,000 ரூபாவாகவும் குறைந்து எட்டு மாதங்களுக்கும் மேலாக பதிவான குறைந்த விலை இதுவாகும் என ஹெட்டி வீதி தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பல நகைக்கடைகளை மூடும் போக்கு காணப்படுவதாகவும் ஹெட்டி வீதி தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்