அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

அடிலெய்டு,நவ 06

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. வீரர்கள் விவரம்:- வங்காளதேசம்: நஜ்முல் ஹசன் ஷாந்தோ, சோமியா சர்கார், லிண்டன் தாஸ், சகிம் அல் ஹசன் (கேப்டன்), அல்ப் ஹசன், நுருல் ஹசன், மொசடக் ஹசன், தஷ்கின் அகமது, நசும் அகமது, இபடோட் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான். பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ஹரிஸ், ஷன் முசூத், இப்தர் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஹரிஸ் ரவுல்ப், ஷாகின் அப்ரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *