இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகயைில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4360 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

இதேவேளை 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 750 ரூபாவுக்கு, 2.3 கிலோ எரிவாயு 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *