
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு, சர்வதேச லயன்ஸ் கழகங்களின் மாவட்டம் 306 B 1 உம் வடமாகாண லயன்ஸ் கழகங்களும் இணைந்து நடாத்தும் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் இன்றையதினம் யாழில் இடம்பெற்றது.
மாவட்ட ஆளுநரின் பிரதம ஆலோசகரும் சுகாதாரத்துறைக்கு பொறுப்பானவரும் ஆன Dr K M கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறுகின்ற இந் நிகழ்வில், சர்வதேச லயன்ஸ் கழகங்களின் முன்னாள் பணிப்பாளர் லயன் சுனில் வட்டவல பிரதம விருந்தினராகவும், முன்னாள் மாவட்ட ஆளுனரும், முன்னாள் மாவட்ட ஆளுனர்களின் ஆளுனர் சபைத்தலைவருமான லயன் Dr V . தியாகராஜா சிறப்பு விருந்தினராகவும், கண் சத்திரசிகிச்சை நிபுணர் லயன் Dr S . சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.