T20 பந்துவீச்சு தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடம் !

ஐசிசி ஆடவர் T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை குறுகிய காலத்திற்கு தக்கவைத்திருந்தார்.

2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண போட்டியில் தனது துல்லியமான பந்துவீச்சில் அவுஸ்ரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்தள்ளி ரஷித் கான் முதலிடத்திற்கு முன்னேறினார்.

20 உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3/13 மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2/23 என்ற கணக்கில் விக்கெட்களை கைப்பற்றி ஹசரங்க தனது திறமையை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *