இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து மயில்கள், குரங்குகள், டோக் மக்காக்குகள் (“ரிலாவா”), கிரிஸ்ல்ட் ராட்சத அணில்கள் (“தாடு லீனா”), முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு வன விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும், இது பயிர் சேதத்தை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக அடையாளம் காணப்பட்டதன் மூலம் அவற்றின் தொகை பெருகியதால், இந்த விலங்குகளால் மில்லியன் கணக்கான ரூபா அளவுக்கு குறிப்பிடத்தக்க பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பட்டியலிலிருந்து நீக்கப்படுவது குறித்த விலங்குகளை வேட்டையாடப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என அர்த்தமல்ல.
அது விலங்குகளின் தொகை கட்டுப்படுத்தப்படும் என அர்த்தம். இந்த விலங்குகளை கொல்லவோ அல்லது வேட்டையாடவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் ஆராய விவசாய அமைச்சின் செயலாளர்கள், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த குழு தனது அறிக்கையை கையளித்துள்ளதாகவும், அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த விலங்குகளால் வருடாந்தம் 121 மில்லியன் தென்னைகளும் 8,000 மெட்ரிக் தொன் நெல்களும் அழிக்கப்படுவதாக அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்தார்