உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு இலங்கைக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தற்போதைய பின்னணியில் இந்து சமுத்திரப் பிராந்தியமானது உயர் அரசியல் மற்றும் பொருளாதார பெறுமதியைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கான 8 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
ரஷ்யா, ஓமான், பிரான்ஸ், மெக்சிகோ, பூட்டான், பராகுவே, லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கான 7 தூதுவர்களும், கானா ராஜ்ஜியத்திற்கான உயர்ஸ்தானிகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரிகளில் 2022ஆம் ஆண்டுடன் தொடர்புடைய 1619 இளங்கலை பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.





