யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் என்பன நடைபெற்றுவருகிறது.
அந்தவகையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் சித்தங்கேணி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், போதைவஸ்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா குகதாஸ், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை பொலிஸார், ஜனசக்தி சனசமூக நிலையத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.