கொட்டகலையில் இலவச மருத்துவ முகாம்!

கொட்டகலை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது உயர்குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டது.

குறித்த மருத்துவ முகாமுக்கு அனுசரணையை கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *