2023 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைக்கும் – வஜிர

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து, பொது மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் என கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் எதிர்கால சந்ததியினருக்கான சாதகமான முன்மொழிவு எனவும் பொது மக்களை ஏமாற்றுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *