நீதிமன்றில் ஆஜராகும் தனுஷ்க!

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் நேற்று (16) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சிட்னி ரயில் நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தகவல்களைப் பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்டு ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *