தமிழக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் உணவகமொன்றில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியில் இணைந்து போட்டியிட கமல்ஹாசன் தீர்மானித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே திரையுலகில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன், கமல்ஹாசன் இணைந்து விக்ரம் திரைப்படத்தை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.