வாகன பதிவு கட்டணமும் அதிகரிப்பு

கொழும்பு,நவ 17

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன பதிவுக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபா. 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபா.

அத்துடன், 1600சிசி மற்றும் 80 கிலோவொட்களுக்கு அதிகமான கார்களுக்கு பதிவுக் கட்டணம் 40,000 ரூபாவாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் 2,000 ரூபாவும், மோட்டார் அம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சவப்பெட்டிகளுக்கு பதிவுக் கட்டணம் 10,000 ரூபாவும் விஷேட நோக்கத்துக்கான வாகனங்களுக்கான முதல் முறை பதிவுக் கட்டணம் 30,000 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *