அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் யாழ் முதல்வர் ஆதங்கம்

ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஆசியாவிற்கான தூதுக்குழுவினர் யாழ் மாநகர சபைக்கு இன்றையதினம் காலை விஜயம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் யாழ் மாநகர சபை முதல்வர் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்தார்


பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலே அரசாங்கம் அசமந்தமாக செயற்படுகிறது இவ்வகையான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டுமானால் புதிய வகையான அரசியல் பொருளாதார கொள்கையை மேம்படுத்துவதற்காகவும். 

எங்களுடைய கலாச்சார மண்டபம் மற்றும் பலாலி விமான நிலையம் திறக்காத விடயம் உட்பட இலங்கை இந்திய படகு சவாரி மேற்காள்ளப்படவில்லை மற்றும் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய நில அபகரிப்பு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நாங்கள் பல்வேறு கோணத்திலிருந்து பதிலளித்தோம் .சில தினங்களுக்கு முன்பாக கூட பொது மக்கள் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததையும் நான் அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

 வனவிலங்கு திணைக்களம், காடுகள் பாதுகாப்பு திணைக்களம் ,மகாவலி அபிவிருத்தி வேலைகள் குறித்தும் இந்நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வன்னி பிராந்தியத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாங்கள் தொடர்ந்து பயிரிட்டு வந்த நிலங்களை இவர்கள் அபகரிக்கின்றார்கள் என்று வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் காடுகள் பாதுகாப்பு திணைக்களம் தொடர்ந்து வழக்குகளை மேற்கொள்கின்றார்கள் என்றும் நான் கூறினேன். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல அழுத்தங்களை அரசுக்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்

 மேலும் மாகாண சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். எனவே அதனை ஈடு செய்வதற்காக அரசு உடனடியாக தேர்தல்களை நடாத்த வேண்டும் மற்றும ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் அவர்களின் முகவர் அமைப்புகளும் அவர்களின் உதவி கரங்களை நீட்ட தயாராக உள்ளார்கள் எனவும் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *