இந்து சமுத்திர பகுதியில் நிலநடுக்கம்: சுனாமி தொடர்பில் வெளியான செய்தி

இந்தோனேசியா,நவ 18

இந்தோனேசியாவின் – பென்குளுவுக்கு அருகில் இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது எச்சரிக்கை குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அத்துடன், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *