பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரின் மேற்கே அமைந்த வெர்செயில்லெஸ் பேலஸ் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச அலகுகள் அமைப்பை நிர்வகிக்கும் எடைகள் மற்றும் அளவீடுகளின் 27-வது பொது மாநாடு நடந்தது.
இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், உலகில் மிக பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை குறிப்பிடுவதற்கான அலகுகளை நிர்ணயிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன்பு, சர்வதேச அலகுகள் அமைப்பு என்றால் என்ன மற்றும் அதன் பணிகள் பற்றி காண்போம். சர்வதேச அலகுகள் அமைப்பு கடந்த 1960-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் வழியே, பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை எளிதில் குறிக்கும் வகையிலான அலகுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். எடுத்துக்காட்டாக, மீட்டர் என்ற அளவையை எடுத்து கொள்ளலாம்.
அவற்றில், ஆயிரம் மீட்டர் என பெரிய அளவீட்டை குறிப்பதற்கு ஒரு கிலோமீட்டர் என, அளவிடுதலில் எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இதேபோன்று, மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற சிறிய அளவீட்டை குறிப்பதற்கு ஒரு மில்லிமீட்டர் என, மற்றொரு எளிய முறை அளவீடு அறிமுகம் செய்யப்பட்டது.