நூற்றுக்கணக்கான பொலிவுட் படங்களில் நடித்த பழம் பெரும் நடிகை காலமானார்

பேபி தபசுமாக அறிமுகம் ஆகி நூற்றுக்கணக்கான பொலிவுட் படங்களில் நடித்த பழம் பெரும் நடிகை தப்ஸ்சும் காலமானார். அவருக்கு வயது 78.

மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்து இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள் எளிமையாக நடைபெற்றன. நாளை பிரார்த்தனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *