அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி! 25 பேர் காயம்

அமெரிக்காவின் இரவு விடுதியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கொலராடோ மாநிலத்தின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரிலுள்ள கிளப் கியூ எனும் இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலின மாற்றம் செய்ததால் வன்முறைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களை நினைவுகூரும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீதே துப்பாக்கிக் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

22 வயதான ஓர் இளைஞனே துப்பாக்கிப் பிரயோகம் செய்தாகவும் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இளைஞன் அண்டர்சன் லீ அல்ட்ரிச் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *