இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாழமுக்கம் – மழை மற்றும் காற்றுக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளதாகவும் அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் வடக்கு மாகாணத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *