கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் வெற்றி

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியும், ஈரான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

கலீஃபா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி, 6-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.


குழு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணியும் செனகல் அணியும் மோதின.

அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், நெதர்லாந்து அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.


குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், அமெரிக்க அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.

அல் ரய்யான் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *