பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் – மு.க.ஸ்டாலின்

பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்து பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு தமது ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றும் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு கலைஞர் வழங்கினார் என்றும் கூறியுள்ளார்.

புதுமை பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 1039 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *