மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காட்மோர் தனியார் தோட்டதை சேர்ந்த மூன்னூறுக்கு மேற்பட்ட மூன்று பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று மதியம் முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தங்களது வேதணத்தில் அரவிடபட்ட ஊழியர்களின் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன முறையாக தொழில் திணைக்களத்திற்கு அனுப்படவில்லை.
மேலும் தொழிலாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில், தங்களது ஊழியர் நம்பிக்கை நிதியம் ஊடாக கடன் பெற்று கொள்ள சென்றபோது இவ்வாறு தோட்ட நிர்வாகம் குறித்த கட்டணங்களை செலுத்தாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே முறுகள் நிலை தோன்றிஉள்ளதோடு, இத்தகைய சம்பவங்களை எதிர்த்தும், எமக்கு நியாயம் பெற்று தரும் படிகோரியும் குறிப்பிட்ட தோட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.