இன்றைய சபை அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
சபை அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகிய வேளை,உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வாக்குவாதம் முற்றியது.
இதன் போது ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தாக்குவதற்கு முற்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர்.
சபையில் உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும், இங்கே உரையாற்ற வந்துள்ளீர்கள். சண்டை பிடிப்பதற்கு யாரும் வரவில்லை. நாகரிகம் அற்ற முறையில் நடந்து கொண்ட சமிந்த விஜயசிறி உறுப்பினர் சபையில் இருந்து வெளியேற வேண்டும். இன்று முழுவதும் அவர் சபை அமர்வுகளில் பங்குகொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்து. அவரை வெளியேற்றினார்.