
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உரையாற்றினார்.
இதன்போது அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.