
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 5 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.