இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் இதனை குறிப்பிட்டார்.
நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் கலந்துரையாடமுடியும்.
எனினும் இலாபமீட்டும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், டெலிகொம் ஆகிய நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லையென்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம், பதில் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அரசாங்கம் ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது கேள்வியாக உள்ளது.
இந்த முடிவைப் பார்க்கும்போது, தேர்தலை பிற்போடும் திட்டம் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.