
பொதுநலவாய செஸ் சாம்பியன்ஷிப் விருதுகள் மற்றும் பரிசளிப்பு விழா பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்றையதினம்(22) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் வெற்றி வீரர்கள் இதில் பங்குபற்றினர்.
விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொதுநலவாய செஸ் சங்கத்தின் தலைவர் பாரத் சிங், இலங்கை செஸ் சம்மேளனத்தின் தலைவர் லக்ஷ்மன் விஜேசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.