போராட்டத்தினாலேயே ரணில் ஜனாதிபதியானார்: அதனை அடக்க முயல்வது வருத்தமளிக்கிறது – விஜித ஹேரத்

போராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கத்தை மாற்றும் இன்னொரு போராட்டத்திற்கு (அறகலய) இடமளிக்கப்போவதில்லை என்றும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அச்சுறுத்துவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போது உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை வெளியேற்றி நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் மக்கள் எழுச்சியே அரகலய என தெரிவித்தார்.

ஜனாதிபதியாக வருவதற்கு வழியமைத்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரகலய மக்களை இரவு பகலாக வணங்க வேண்டும் என்றும் அவர்களை அச்சுறுத்தி அதனை அடக்க முயற்சிப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *