இலங்கையில் 85 இலட்சம் ரூபாவுக்கு பெற்றோல் விற்ற நபர் – வசமாக பொலிஸாரிடம் சிக்கினார்

கந்தளாயில் 85 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி  செய்த நபர் ஒருவருக்கு எட்டு வருட சிறைத் தண்டனையும்,எட்டு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கந்தளாய், லைட்வீதி,பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியான காலகட்டத்தில் டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றை  பெற்றுத்தருவதாகக்  கூறி பலரிடம்  85 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணம் செலுத்தியவர்களால் , கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட மாதம் 8 ஆம் திகதி சந்தேநபர்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த நபருக்கெதிராக கந்தளாய் நீதிமன்றில்  நடைபெற்று வந்த வழக்குகளில் குற்றம் நீருபிக்கப்பட்டதால் நீதிவான் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *